சினிமா செய்திகள்
தெகிடி திரைப்பட நடிகர் மர்ம மரணம்
தெகிடி, மேயாத மான் உள்ளிட்ட பல திரைப் படங்களில் நடித்த, நடிகர் பிரதீப் விஜயன் பூட்டிய வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், தமிழ் திரையுலகி
நடிகை சோனாக்ஷி சின்ஹா காதலனை கரம் பிடிக்கறார்
நடிகை சோனாக்ஷி சின்ஹா தன்னுடைய நீண்ட நாள் காதலரான, ஜாகீர் இக்பால் என்பவரை இந்த மாதம் 23-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ள தகவல் வெளியாகியுள்ளது. பிர
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.கடந்த ஆண்டு அவருடைய நடிப்பி
நடிகை திஷா பதானி கிளாமர் உடையில் வெளியிட்ட புகைப்படம்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீர
பிதா  திரைப்படம் பற்றிய தகவல்
ஸ்ரீனிக் புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார்தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக
கவர்ச்சி புயலாய் மாறும் மாளவிகா மோகனன்
மலையாள திரை உலகில் பிரபல ஒளிப்பதிவாளராக திகழ்ந்த மோகனன் அவர்களின் மகள் தான் மாளவிகா மோகனன் மலையாள திரைப்படங்கள் மூலம் தனது இருபதாவது வயதில் இவர் தனது
'காஞ்சனா 2’ தகவல் எல்லாமே வதந்தி - ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் நடித்த இயக்கிய காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் நான்காம் பாகம் குறித்த தகவல் கடந்த சில நாட்களுக்கு மு
திவ்யா துரைசாமி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்
பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. சில வருடங்களுக்கு முன்னர் வெளியான இஷ்பேடு ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறி
வசூலை அள்ளி குவிக்குது கருடன் திரைப்படம்
விடுதலை படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சூரி. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க சான்ஸ் குவிந்து வருகிற
பெயர் மாற்றப்பட்ட ‘ரயில்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
எழுத்தாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் அறியப்படும் பாஸ்கர் சக்தி வடக்கன் என்ற படத்தை இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இவர், எம்டன்
இரண்டு பதவியேற்பு விழாவிற்கும் அழைப்பிதழ் - ரஜினிகாந்த் என்ன முடிவெடுப்பார்?
பிரதமராக மோடி பதவி ஏற்கும் விழாவிற்கும், முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கும் விழாவுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவு
இணையத்தில் வைரலாகி வருகிறது ஆண்ட்ரியாவின் புகைப்படம்
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
Ads
 ·   ·  298 news
  •  ·  0 friends
  • 1 followers

முக்கியமான இரு சட்டமூலங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம் - : பதில் நிதி அமைச்சர் செஹான்

இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை நாளை புதன்கிழமை (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுப்பதற்காக நாட்டின் அரச நிதியை உகந்த மட்டத்தில் முகாமைத்துவம் செய்யப்படுவதை உறுதிசெய்ய “பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலம்” மற்றும் “அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ” ஆகியவை சமர்ப்பிக்கப்படும் என்று செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்த தெரிவிக்கையில் -

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த சட்டமூலங்களில் ஒன்று, மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுப்பது தொடர்பாக முன்வைக்கப்படும்.

“பொருளாதார பரிமாற்றம் சட்டமூலம்”ஆகும்.இந்த சட்டமூலம் சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்படவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின்படியே இந்த சட்டமூலம் முன்வைக்கப்படுகின்றது .

கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலை எதிர்காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.மேலும், மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில், நாட்டின் அரச நிதி முகாமைத்துவம் மிகவும் உகந்த நிலையில் பேணப்பட வேண்டும்.

இது தொடர்பான பொறுப்புக்கூறல் தொடர்பில் கவனம் செலுத்தி, அரச நிதியை முறையான முகாமைத்துவம் செய்வதற்காக “அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம்” மே மாதம் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான கூட்டு வேலைத்திட்டத்தில் இது தொடர்பில் எமக்கு சுட்டிக்காட்டப்பட்டது. நாட்டின் எதிர்கால நிதி நிர்வாகத்தில் இது மிகவும் முக்கியமான சட்ட மூலம் என்பதையும் கூற வேண்டும்.

இந்த இரண்டு சட்ட மூலங்களும் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானவை என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்த இரண்டு சட்டமூலங்களிலும் பல தொழில்நுட்ப விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார போக்கை மாற்றாமல் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மேலும் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார பரிமாற்றம் குறித்த சட்ட மூலம் பற்றி மேலும் விளக்கினால், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானது. 2023 இன் இரண்டாவது மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் பொருளாதாரச் சுருக்கம் ஏற்பட்டது.

ஆனால் நான்காவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.5% எட்டப்பட்டது. அதனுடன், பொருளாதார நன்மை இந்த நாட்டில் மிகக் குறைந்த மட்டத்திற்கும் கிடைக்கத் தொடங்கியது.

குறிப்பாக, சர்வதேச வர்த்தகம், வர்த்தக ஒப்பந்தங்கள், காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களில் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டிய சட்டக் கட்டமைப்பு இந்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் புதிய பொருளாதார ஆணைக்குழுவை நிறுவுவது, போட்டித்தன்மையில் முதலீடுகளை ஈர்ப்பது, முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவது, சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்துவது, தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழுவை நிறுவுவது மற்றும் ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்களை ஸ்தாபிப்பது குறித்து இந்த சட்டமூலம் ஊடாக கவனம் செலுத்தப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும்  

இந்தச் சட்டமூலங்கள் மூலம் இறுதியில், நிலைபேறான பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கும், கடன் கொடுப்பனவுகளை நிலைபேறான மட்டத்தில் பேணுவதற்கும், விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை முகாமைத்துவம் செய்வதற்கும், கொடுப்பனவு சமநிலையை நிர்வகிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத் திசை சரியாக வழிநடத்தப்படுவதை நாம் எதிர்பார்க்கிறோம்.

மேலும், அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ஊடாக பாரிய கருத்தாடல் எழுந்துள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பலவீனங்களைக் கண்டறிந்து, எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருத்தமான சட்டக் கட்டமைப்பை முன்வைப்பது இதன் மூலம் இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 527
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads