Ads
சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்து
சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 05 ஆம் திகதி முதல் 11 திகதி வரை மாத்திரம் சுமார் 26,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா தொற்று காரணமாக நாளாந்தம் 250 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சராசரியாக நாளாந்தம் மூவர் அதிதீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அந்நாட்டு வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை வார்டுகளை தயார் நிலையில் வைக்குமாறும் அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொது மக்கள் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Info
Ads
Latest News
Ads