
காலநிலை அனர்த்தினால் 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு - தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு
காலநிலை அனர்த்தினால் 10 ஆயிரத்திற்கும் இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கால நிலை அனர்த்ததினால் 3598 குடும்பங்களை சேர்ந்த 10663 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அந்த மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அரைக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சப்ரகமுவ மாகாணத்திலுள்ள கேகாலை மாவட்டத்தில் இடி மின்னல் மற்றும் மண்சரிவு, மற்றும் உயர் காற்றழுத்தம் காரணமாக 83 குடும்பங்களை சேர்ந்த 381 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகள் முளுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சப்பிரகமுவ மாகாணத்தை சேர்ந்த இரத்திபுரி மாவட்டத்தில் அதி கூடிய மழையினால் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இதே வேளை வடமாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக 432 குடும்பங்களை சேர்ந்துள்ள 946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் 2618 குடும்பங்களை சேர்ந்துள்ள 8000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம் திருகோணமலை மாவட்டத்தில் 464 குடும்பங்களை சேர்ந்துள்ள 1334 பேர் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.
இதனிடையே கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
வடிகால் அமைப்புகளின் முறைகேடு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அதன் பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.
நீர் வடிந்து செல்லும் கால்வாய்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நிலவும் அதிக மழைவீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம், துனமலே பகுதியில் அதிகரித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அத்தனகலு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000