Category:
Created:
Updated:
இம்மாதத்தின் முதல் 16 நாட்களில் 61,735 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவில் இருந்து வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியாவிலிருந்து 14,430 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் அத்துடன் மாலைத்தீவிலிருந்து 6,129 பேரும், ஜேர்மனியில் இருந்து 5,144 பேரும், பிரித்தானியாவில் இருந்து 4,110 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000