
ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் கருத்தை யதார்த்தமாக்க இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை புதிய ஒப்பந்தம்
ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் கருத்தை யதார்த்தமாக்க, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை, தொழில் முனைவோர் மன்றத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது.
தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல், உள்ளூர் வேலைவாய்ப்புக்களை அதிகரித்தல் உள்ளிட்ட நோக்கங்களை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புதிய தொழில் முயற்சிகளில் இது தனித்துவ வாய்ப்பாக அமைந்துள்ளதாக இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் டொக்டர் சாரங்க அழகப்பெரும தெரிவித்தார்.
கைத்தொழில் அபிவிருத்தி சபையின் சார்பில் தலைவர் டொக்டர் சாரங்க அழகப்பெருமவும், நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி மன்றம் சார்பில் தலைவர் திருமதி சசிகா டி சில்வாவும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஊடாக, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையானது நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் தொழில் முயற்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் ஆதரவளிக்கவும் நடவடிக்கை எடுக்கும்.
கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையானது நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் உள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்வதில் சபையின் மாவட்ட அலுவலகங்கள் மூலம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மேலும், தொழில்முனைவோரின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு சிலோன் பிளாசா என்ற நல்ல மேடையை ஏற்கனவே பெற்றுக் கொடுத்துள்ளது. இதன் மூலம் தொழில்முனைவோர் அனைவரும் இலவசமாக சேவையைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
000