Ads
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் எலோன் மஸ்க்
உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இந்தியாவுக்குச் செல்ல உள்ளதாக ‘எக்ஸ்’ செய்தி ஊடாக தெரிவித்துள்ளார்.
டெஸ்லா தொழிற்சாலையை நிறுவுவதில் முதலீடு செய்வது தொடர்பான உடன்பாட்டை எட்டுவதே அவரது வருகையின் நோக்கம் என்று கூறப்படுகிறது. இதேவேளை கடந்த வாரம் இந்தியா மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியை கணிசமாக குறைத்தது.
500 மில்லியன் டொர்களுக்கு மேல் முதலீடு செய்து, மூன்று ஆண்டுகளுக்குள் உள்நாட்டில் உற்பத்தித் தொழிற்சாலையைத் தொடங்கக்கூடிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் அந்த வாய்ப்பின் கீழ் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்றும் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads