ஏறக்குறைய 5% இலங்கையர்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இலங்கையின் சனத்தொகையில் ஏறக்குறைய 5% ஆனவர்கள் தற்போது குளுக்கோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். உலகில் குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று குளுக்கோமா.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் மாத்திரமன்றி உலகெங்கிலும் குளுக்கோமா நோயாளர்கள் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பில் காணப்படுகின்றனர்.
“உலகத்தை எடுத்துக் கொண்டால், 3.54% குளுக்கோமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இலங்கையை எடுத்துக் கொண்டால், அது கிட்டத்தட்ட 5% ஆகும். இது நமது அதிகரித்த முதியோர் சனத்தொகை காரணமாகவும் இருக்கலாம்” என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கண் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், கண் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக நாட்டின் சுகாதார அமைப்பில் உள்ள திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வைத்தியர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.