Ads
சவூதி அரேபியா இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை அன்பளிப்பாக வழங்கியது
சவூதி அரேபியாவின் மன்னரின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் 50 தொன் பேரிச்சம்பழங்களைக் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது,சவூதி தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி, இலங்கை அதிகாரிகளிடம் இந்த பேரிச்சம்பழங்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன மற்றும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் இவை வழங்கப்பட்டன . சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அமீர் அஜ்வாத் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் பல அதிகாரிகள், அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Info
Ads
Latest News
Ads