ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் சிறையில் மரணம்! புதினை விமர்சித்தவருக்கு நேர்ந்த பரிதாபம்
ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாகப் பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் மரணம் அடைந்தார்.
தொடர் மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றங்களுக்காக இவருக்கு கூடுதலாக 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட பிற வழக்குகளான தீவிரவாதத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட குறங்களுக்காக 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
சிறையில் தண்டனை அனுபவித்த வந்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம் அடைந்துள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இவர் அதிபர் புதினை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!
கடந்த 2021ஆம் ஆண்டு அலெக்ஸி மயங்கி விழுந்த நிலையில் அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு விஷம் கொடுத்து இருந்ததை ஜெர்மனி அரசு உறுதிப்படுத்தியது. மேலும் அவருக்கு விஷம் வைக்கப்பட்டதில் ரஷ்ய அரசுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.