பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க தீர்மானம்
பாகிஸ்தானில் நேற்று முன்தினம் (08.02.2024) நடைப்பெற்ற பொதுத்தேர்தலையடுத்து கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே பேச்சு வார்த்தை நடந்து உள்ளது.
இம்ரான் கான் ஆதரவாளர்கள் 91 இடங்களை கைப்பற்றியதால், கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார். மொத்தம் 336 உறுப்பினர்களை உடைய பார்லிமென்டிற்கு, 266 பேர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
மீதியுள்ள இடங்களில், 60 பெண்களுக்கும், 10 அந்நாட்டு சிறுபான்மை இன மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததை அடுத்து, 265 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில், ஆட்சி அமைப்பதற்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். வாக்குப்பதிவு முடிந்ததும், ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது.
மொத்தமுள்ள 266 இடங்களில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள், 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். நவாஸ் ஷெரீப் கட்சி 71 இடங்களையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 இடங்களையும் வென்றுள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஒப்புக் கொண்டுள்ளன. மொத்தமுள்ள 266 இடங்களில், இம்ரான் கான் ஆதரவாளர்கள் 91 இடங்களை கைப்பற்றியதால், கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார்.