சினிமா செய்திகள்
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
Ads
 ·   ·  8175 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் மேடையை விட்டு ஓடிய பிரபலங்கள்

யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய பிரபலங்கள் பங்குபற்றும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டு வருவதால் கலாசார சீர்கேடுகள் ஏற்படும் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்த பின்புலத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் பாரிய தள்ளு முள்ளுகள் ஏற்பாட்டதால் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது.

நடிகர் ரம்பாவின் கணவர் இந்திரனின் நொதன் யூனியன் அறக்கட்டளையின் ஊடாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் பெருமெடுப்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஸ், தமன்னா, பிரபல நடிகர் மிர்ச்சி சிவா உட்பட நடிகர்களும் நடிகைகளும் பங்கேற்றனர்.

பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதியளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் நட்சத்திரங்கள் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த பகுதியை நோக்கி ரசிகர்கள் படையெடுத்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

கூட்டம் கட்டுக்கடங்காது மேடையை சுற்றி சூழ்ந்ததால் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையை கட்டுப்படுத்த முடியாது போனது. பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளையும் ரசிகர்கள் உடைத்தெறிந்து மைதானம் முழுவதும் சூழ்ந்தனர்.

இதனால் குழுமியிருந்த பிரபலங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் பாதுகாப்பாக அவர்கள் முற்றவெளி மைதானத்தில் இருந்து அகற்றப்பட்டனர்.

தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்நுழையும் போது கதிரைகள் அங்குமிங்கும் எறியப்பட்டதால் பலர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்களும் நடந்தன. அத்துடன் பொலிஸார் ரகிசர்கள் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல்களையும் நடத்தினர். குழப்பகரமான சூழ்நிலைக்கு வழிவகுத்த குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் காயமடைந்த மூன்று பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்பாட்டாளர்கள் முறையாக ஒழுங்குப்படுத்தாமை, பொலிஸாரின் பாதுகாப்பு பற்றாக்குறை காரணமாக கட்டுக்கடங்காத பார்வையாளர்கள் மேடைக்கு அருகில் கூடினர். இதனால் நிலைமை மோசமடைந்து நிகழ்ச்சி இடை நிறுத்தப்பட்டது.மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்ட போதும் கூட்டம் கட்டுங்கடங்காது சென்றது. கதிரை, தண்ணீர் தாங்கிகள் உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாக்கப்பட்டன.

முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர்.

  • 187
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads