நாளை முதல் கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம்
76 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஒத்திகை நடவடிக்கை இடம்பெறும் தினங்களில் கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், சுதந்திர தின கொண்டாத்திற்காக 3ம் திகதி மதியம் 2 மணி முதல் 4ம் திகதி சுதந்திர தின விழா நிறைவடையும் வரையிலும் இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, காலி வீதியின் சில பகுதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் காலி முகத்திடல் வரையான பகுதியும் செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையிலான பகுதியும் பல கட்டங்களின் கீழ் நாளை முதல் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி வரை மூடப்படவுள்ளன.