ஒரு பெட்டிக்கடையையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ நிர்வகிப்பது போல நாட்டை நிர்வகிக்க முடியாது : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார்
.நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு தற்போதைய ஜனாதிபதியே பொருத்தமானவர் என்பது தனது தனிப்பட்ட நம்பிக்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போது நாடு சோதனைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான தருணத்தில் இல்லை எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறான சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் நாடு மேலும் பாதாளத்தில் விழும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மினுவாங்கொடை மற்றும் கம்பஹா உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் நேற்று (15) உடுகம்பல பிரதேசத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.கம்பஹா மற்றும் மினுவாங்கொட தேர்தல் தொகுதிகளின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இப்போது ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். வகை வகையான வேட்பாளர்கள் வருகின்றனர். ஒரு பெட்டிக்கடை அல்லது நிறுவனத்தை நீங்கள் நிர்வகிப்பது போல் ஒரு நாட்டை நீங்கள் நிவகிக்க முடியாது. யார் வேண்டுமானாலும் பெருமை பேசலாம். ஆனால் எல்லோரும் வேலை செய்ய முடியாது. பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், மக்கள் நலன் காக்கும் அரசை நிறுவுவதற்கும் எமக்கு மிகக் குறைந்த காலமே உள்ளது. எனவே, மற்ற வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்க வாய்ப்பு அளிக்க சந்தர்ப்பம்.ஒன்று இல்லை. இது பரிசோதனைக்கான நேரம் அல்ல. தற்பெருமை காட்டாமல் உழைக்கும் எதிர்காலத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. எனவே தற்போதைய ஜனாதிபதியே தற்போது ஜனாதிபதி பதவிக்கு மிகவும் தகுதியானவர் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.