Category:
Created:
Updated:
நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்தத்திற்கு மத்தியில் மருத்துவமனை நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக முப்படையினரும் அணிதிரட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மருத்துவர் அல்லாத ஊழியர்கள் இன்று (16) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சுகாதாரத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.