Category:
Created:
Updated:
கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று இரவு இடம்பெற்ற விபத்தினால் அவர்கள் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி குறியீடுகளை உடைத்து நீர்பாசன வாய்க்காலிற்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுசன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஸ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.