Category:
Created:
Updated:
கட்சித் தலைவரை தெரிவு செய்ய வாக்களிப்பது சிறந்தது என இலங்கை தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இரா சம்பந்தனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு தீர்வை வழங்குவோம் என ஊடகங்களில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் கட்சி உறுப்பினர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென கூறியமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை காரியாலயத்தில் நேற்று (12) கட்சி உறுப்பினர்களை சந்தித்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.