எதிர்க்கட்சித் தலைவரின் தந்தை புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் : பிரசன்ன ரணதுங்க
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நற்பெயரை பெறும் நோக்கில் பாராளுமன்றத்தில் உரைகளை நிகழ்த்தி வருவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரை மட்டும் பேச அனுமதிப்பதன் மூலம் அவர் சொல்வதே பிரபலமாகிவிடும் என அமைச்சர் முறைப்பாடு ஒன்றை முன்வைத்தார். இது மிகவும் தவறான நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றம் இன்று (11) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உரைக்கு பதிலளிக்கும் போதே ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டோரைப் பற்றி பேசுகிறார். உங்கள் சகோதரி திருடப்பட்ட பணத்துடன் பிடிபட்டபோது முன்னாள் ஜனாதிபதியே காப்பாற்றினார். இது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்தது. மேலும் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தவர் உங்கள் தந்தை. அதைப் பற்றியும் பேசலாம். என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பேசினார்.