Ads
யுக்திய நடவடிக்கையினால் குற்றச் செயல்கள் குறைந்தன
போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி முதல் இம்மாதம் 3 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் குற்றச் செயல்கள் கணிசமானளவு குறைந்துள்ளதாக குற்றப்பிரிவின் பிரதிப் பொலிஸ் மா காலிங்க ஜயசிங்க இன்று புதன்கிழமை (10) தெரிவித்தார்.
கொலை, பாலியல் துஷ்பிரயோகம், வீடு உடைத்தல், வாகனங்களைக் கொள்ளையிடுதல் போன்ற பல குற்றங்கள் வன்முறைக் குற்றத்தின் கீழ் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெளிப் பிரதேசங்களிலிருந்து கொழும்புக்குள் பிரவேசித்த பஸ்கள் உட்பட பெருந்தொகையான வாகனங்கள் இன்றையதினம் காலை பல இடங்களிலும் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
Info
Ads
Latest News
Ads