Category:
Created:
Updated:
அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி குடும்பத்தினர் ராகேஷ் கமல், டீனா தம்பதிகளுக்கு 18 வயதுடைய அரியனா என்ற மகள் இருக்கிறார். இவர்கள் அனைவரும் தங்களின் வீட்டில் உள்ள வெவ்வேறு அறைகளில் வசித்து வருகின்றனர். தம்பதிகள் இருவரும் அங்குள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள் சமீபகாலமாக தம்பதி பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டதாக தெரியவருகிறது. நேற்று மூவரும் தங்களின் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். முதற்கட்டமாக நிதிச்சுமையால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மூவரும் தற்கொலை செய்துகொண்டது உறுதியானது.