Category:
Created:
Updated:
அடையாள அட்டை அல்லது நகல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபரின் புகைப்படத்தை டிஜிட்டல் வடிவில் நகல் எடுப்பதற்கு பதிவுக் கட்டணமாக புகைப்படக் கலைஞரால் வசூலிக்கப்படும் அதிகபட்ச கட்டணம் 400 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த கட்டணம் இரத்துச் செய்யப்படுவதாக தெரிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 150 ரூபாவாக வசூலிக்கப்பட்டது
ஒரு அடையாள அட்டை அல்லது அடையாள அட்டையின் நகலைப் பெறுவதில், விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்லைன் மூலம் ஆட்கள் பதிவுத் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும்.