Category:
Created:
Updated:
இங்கிலாந்தில் உள்ள Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இலங்கை மாணவர் ஒருவர் வீதி விபத்தில் உயிரிழந்தார். கடந்த வாரம் 31 வயதான ஓஷத ஜயசுந்தர நோட்டிங்ஹாமில் உள்ள வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது.
அந்த காரின் பின்னால் ஒரு பொலிஸ் கார் பயணித்துள்ள நிலையில், பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க அதிவேகமாக சென்ற போது, விபத்துக்குள்ளானது.
இதில் ஓஷாத சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணம் தொடர்பாக 27 வயதான ஜோசுவா கிரிகோரி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, அவரது கார் காப்பீடு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.