Category:
Created:
Updated:
பல்கலைக்கழக மாணவர்களை கட்டாயமாக நான்கு மாதங்கள் சமூக சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் வன்முறைகளை தவிர்க்க, புதிதாக உள்வாங்கப்படும் மாணவர்களை 4 மாதகால சமூக சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அடுத்த ஆண்டு 41,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.