Category:
Created:
Updated:
அற்புதமான விடயங்களை உள்ளடக்கிய இந்தப்பிரபஞ்சத்தின் போர்வையாக திகழும் வானில் எண்ணிலடங்கா அதிசயங்கள் நிகழ்வதென்னவோ வழக்கமென்றாலும் இன்றைய தினம் வானம் பொழியும் விண்கல் மழை இடம்பெறவிருப்பதாக ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.
ஏறத்தாழ இன்று நள்ளிரவு வேளையில் விண்கல் மழையை அவதானிக்க முடியுமென ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு எதனால் நிகழ்கிறது என்று பலரும் சந்தேகிக்கின்ற நிலையில், பைத்தன் 3,200 சிறுகோளில் இருந்து வெளியேறும் கழிவுகள் பூமியை கடந்து செல்வதால் இது நிகழ்கிறது என்று கூறப்படுகிறது.
பைத்தன் 3,200 சிறுகோளின் கழிவுகள் பூமியின் வளிமண்டலத்தில் மோதிய பிறகு இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெளிவான வானில் ஒரு மணி நேரத்திற்கு 100 முதல் 120 விண்கற்கள் வரை விழலாம் என கூறப்படுகிறது.