Category:
Created:
Updated:
இந்தியாவுடனான நீரியல் துறை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து மாலத்தீவு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவுக்கு பயணமான போது கையெழுத்தான ஒப்பந்தத்திலிருந்தே இப்போது மாலத்தீவு விலகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இந்திய கடற்படை, மாலத்தீவில் விரிவான நீரியல்வரைவு ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்ததத்தில் இருந்து வெளியேறும் முடிவை மாலத்தீவு அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்று பதவி ஏற்றதன் பின்னர், சீனாவின் ஆதரவாளரான அவர், மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை உடனே வெளியேறுமாறு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.