Category:
Created:
Updated:
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப்போவதில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் நல்லுறவு முயற்சிகளில் எதிர்கட்சி தலைவர் ஈடுபட்டுள்ளார் என ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சில ஊடக நிறுவனங்கள் போலிச்செய்திகளை பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள எதிர்கட்சி தலைவர் அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் இதனை செய்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.