Category:
Created:
Updated:
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூட்டம் எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. இதன்போது இலங்கை குறித்து மங்களகரமான செய்தியை நாணய நிதியம் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தவணையான 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள், உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இம்மாதத்தில் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (09) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.