கல்முனை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கிளை சுமந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு
தலைமை மாற்றம் தொடர்பில் மு.மாநகரசபை உறுப்பினர் பொன்.செல்வநாயகம் அபிப்பிராயம் வெளியிட்டார்.
கல்முனைத் தொகுதி தொண்டர்களின் பெரும்பால நிலைபாட்டினை அவதானிக்கும் போது கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு மற்றும் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி என மட்டுமல்லாமல் அம்பாறை மாவட்டத்தின் மாணவர்களின் கற்றல் உதவிகள் என பல்வேறு செயல்பாட்டில் ஈடுபடுகின்றவரும் சர்வதேச நாடுகளோடு தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்தியம்புகின்ற வல்லமையும் உள்ள ஒருவராக ஜனாதிபதி சட்டத்தரணி திரு எம் ஏ சுமந்திரன் அவர்கள் உள்ளார் என குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பில் எங்கள் தொகுதியின் பதவி நிலை உறுப்பினர்கள் மற்றும் வட்டார தலைவர்கள் பெரும்பாலும் தமது நிலைப்பாட்டை எதிர்வரும் 18 ஜனாதிபதி சட்டத்தரணி திரு எம் ஏ சுமந்திரன் அவர்களிடம் நேரடியாக தெரிவிக்கவிக்க உள்ளனர் என பொன். செல்வநாயகம் தெரிவித்தார்.