Category:
Created:
Updated:
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை உருவாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. நாட்டு மக்களை அடக்குவதற்கு ஊடகத்தை அடக்குவதே ஒரே வழி என்று அரசாங்கம் நினைக்குமாயின் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடையும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஊடகவியலாளர்கள் அரச கட்டமைப்பினாலும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களினாலும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெகுஜன ஊடகம் மற்றும் துறைமுகம், கப்பற்றுறை, மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.