வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
ஒமைக்ரான் வைரசின் புதிய வகை பரவல் வேகம் எடுத்ததால் சீனா திணறி வருகிறது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பல நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவும் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 6 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிகிறது. கொரோனா உறுதியான 39 பேரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிஎப்-7 ரக கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மரபணு சோதனை முறை நடத்தப்பட்டுள்ளது. முந்தைய பாதிப்புகளை மேற்கோள் காட்டி வரும் நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சுகாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.