பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுகளையும் கிராமிய புத்தெழுச்சி மையங்களாக அரசாங்கம் அறிவித்து வேலைத்திட்டம் ஆரம்பம்
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுகளையும் கிராமிய புத்தெழுச்சி மையங்களாக அரசாங்கம் அறிவித்து அதன் செயற்பாடுகள் தொடர்பான வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுதற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கிராமப் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுகளையும் கிராமிய புத்தெழுச்சி மையங்களாக அரசாங்கம் அறிவித்து அதன் செயற்பாடுகள் தொடர்பான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.அதனடிப்படையில் இன்று(24-11-2022) வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் இரண்டு பிரிவுகளாக கிராமிய புத்தெழுச்சி குழுவின் கலந்துரையாடலானது இடம்பெற்றது.குறித்த இரு கலந்துரையாடல்கள் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ந.ரஞ்சனா அவர்களின் தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்றன.காலை 10.00 மணிக்கு பாலிநகர் கிராம சேவகர் அலுவலகத்திலும், தொடர்ந்து பி.ப 2.00 மணியளவில் நட்டாங்கண்டல் கிரம அலுவலர் அலுவலகத்திலும் இடம்பெற்றன.இதன்போது குறித்த பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்துக்கான ஒருங்கிணைந்த பொறிமுறையின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.மேலும் தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான ஒருங்கிணைந்த பொறிமுறையின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடல்!நாட்டில் நிலவிவரும் பொருளாதார பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வது, சத்துணவினை பெற்றுக் கொடுக்கும் வழிமுறைகள், வறுமையிலும் பட்டினியாலும் வாடும் குடும்பங்களை மீட்டெடுக்கும் வழிவகைகள், சிறுவர்களின் போசாக்கு, பாடசாலை இடைவிலகலைத் தவிர்த்தல் முதலான முக்கியமாக பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.மேலும் வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ம.கி வில்வராஜா, மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரும் மாவட்ட உலக உணவுத்திட்ட பொறுப்பதிகாரியுமான க.ஜெயபவாணி, பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் வோல்டி சொய்சா, கிராமி புத்தெழுச்சி குழுவின் அங்கத்தவர்கள், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர், பாடசாலை அதிபர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.