Category:
Created:
Updated:
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இலங்கை திருச்சபையினால் முன்னெடுக்கப்பட்ட தையல் பயிற்சி நிறைவு செய்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கருணாநிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண குரு முதல்வர் வணக்கத்துக்குரிய பரிமலச்செல்வன், வணபிதா டானியல், ஆசிரியர்கள், கொடையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.11 பயிற்சி பெற்ற குழுக்கள் வெளியேறியுள்ள நிலையில், (25.11.2022) வியாழக்கிழமை 12வது குழு பயிற்சி நிறைவு செய்து வெளியேறுகின்றது.6 மாதம் கொண்ட தையல் பயிற்சியானது, இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.