Category:
Created:
Updated:
கிளிநொச்சி கண்டாவளை கமநல சேவை நிலைய நிர்வாக எல்லைக்கு உட்பட்ட முரசுமோட்டை பிரதான நீர்ப்பாசன வீதியோரங்களில் புலிங்கதேவன் முறிப்பு மற்றும் முரசுமோட்டை கமக்கார அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிறீன் லேயர் நிறுவனம் முரசு மோட்டை மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்) ஆகியவற்றினால் இயற்கை சூழலை பாதுகாக்கும் விதத்தில ஆயிரம் மரக்கன்றுகள் நடுகை செய்யும் ஆரம்ப நிகழ்வு 19-11-2022 பகல் 9.30 மணிக்கு கிராம அலுவலர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.நிகழ்வின் கண்டாவளை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கிரீன்லியர் நிறுவனத்தின் பிரதிநிதி ஊரியான் கிராம அலுவலர் ஊரியான் முருசுமோட்டை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாயிகள் நலன் விரும்பிகள் என கலந்து கொண்டு மரக்கண்றுகளை நாட்டிவைத்துள்ளனர்.