41 நாடுகளில் பரவியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ்
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது 41 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவியுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட VOC-202012/01 உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் ஆறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்தியங்களில் ஐந்தில் உள்ள 40 பிற நாடுகளில் அல்லது பிரதேசங்களில் அல்லது பகுதிகளில் குறைந்தளவிலான எண்ணிக்கையிலான நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட 501Y.V2 உருமாறிய கொரோனா வைரஸ் ஆறு நாடுகளில் அல்லது பிரதேசங்களில் அல்லது பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் முதல் முதலாக உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு பல நாடுகளும் பிரித்தானியாவுக்கான பயணங்களை இடைநிறுத்தியிருந்தன.
ஆரம்பத்தில் பரவிய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள புதிய வகை கொரோனா 70 சதவீதம் வேகமாக பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

















முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்
கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள்
Song From Bheeshma
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அண்மையில் ஒரு கூட்ட மேடையில் பேசும்போது போகிறபோக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை கேலி பேசுவதாக நினைத்து அருவறுப்பான சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
இரட்டை அர்த்தம் தொனிக்கும் விதமாக பேசுவது தனக்கு கைவந்த கலை என்பதுபோல், தன் அருகில் இருந்தவர்களைப் பார்த்து அப்போது சிரிக்கவும் செய்தார். பெண்களை கண்ணியக் குறைவாக உதயநிதி பேசியது தமிழகம் முழுவதும் பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு கட்சிகளை சேர்ந்த மகளிரணி தலைவிகளும், பெண்ணிய அமைப்பினரும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி அதிமுக மகளிர் அமைப்பினர் போலீசிலும் புகார் செய்துள்ளனர்.
ஒரு நாள் லீ லீ,அவள் தகப்பனாரின்
##தெரிந்து கொள்ளுங்கள்## நாம் தினமும் உணவு உண்ணும் போது முதலில் காகத்துக்கு உணவளிக்க வேண்டும். இதனால் சனியின் தாக்கம் எமக்கு குறைவாக இருக்கும்.சனியின் தோசம் உள்ளவர்கள் தினமும் இதை செய்து வாருங்கள்.அக்காலங்களில் எமது மூதாதையர்கள் மனித வாழ்வின் மேன்மைக்காக எவ்வளவோ நல்ல விடையங்களை விட்டு சென்றுள்ளார்கள் . அதில் இதுவும் ஒன்று.நாம்தான் எல்லாவற்றையும் மறந்து விட்டோமே...!! அறிந்து கொள்வோம்... தெரிந்து செய்வோம்.
...
யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு நேற்றையதினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியிலும், நிதி ஒதுக்கீட்டிலும் இந்த அலங்கார வளைவு சம்பிரதாய, பண்பாட்டுச் சின்னங்களைத் தாங்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலங்கார வளைவின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், விசேட யாக பூசைகள் இடம்பெற்றன.
இந்நிலையில், தைத்திருநாளான நேற்று, நல்லூர் ஆலயத்திலிருந்து திறப்பு விழாவுக்குத் தேவையான பொருட்கள் பாராம்பரிய முறைப்படி மாட்டு வண்டிலில் செம்மணி அலங்கார வளைவு அமைந்துள்ள இடத்திற்கு எடுத்துவரப்பட்டன.
அத்துடன், தவில், நாதஸ்வரம் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களைப் பாராயணம் செய்ய, இறையாசியுடன் அலங்கார வளைவுத் திறப்பு விழா இடம்பெற்றது.
சிவாச்சாரியர்கள், சைவசமயப் பெரியவர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், உறுப்பினர்கள், அதிகாரிகள், நல்லூர் கந்தசுவாமி ஆலய பரிபாலகர்கள் எனப் பலரும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அரசினால் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபட பணிகள் புதன்கிழமை (13) ஆரம்பிக்கப்பட்டன. மாணவர்களின் மேற்பார்வையோடு பொறியியலாளர், பல்கலைக்கழக கட்டட பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை பிரிவினரால் நில அளவுத்திட்ட பிரமாணங்கள் போன்றன கணிக்கப்பட்டன.
இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபியை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என துணைவேந்தர் தெரிவித்தார்.
22 வயதில் 11 திருமணம் செய்து பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டி தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் முகநூல் மூலம் கணேஷ் என்ற நபரை காதலித்துள்ளார். இருவருக்கு முகநூலில் காதல் மலர, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனார். ஆளே இல்லாத பகுதியில் கணேஷ் அந்த பெண்ணிற்கு தாலி கட்டினார்.
இந்த நிலையில் பெண்ணை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய போது, கணேசுடன் வாழ விருப்பம் என பெண் தெரிவித்ததால் இருவரும் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் போலீசார் பெண்ணை கணேசுடன் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வில்லிவாக்கம் பகுதியில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்திய போது, அன்றிரவே 17 வயது சிறுமியுடன் வந்த கணேஷ், வீட்டு வேலைக்காக இந்த சிறுமியை வைத்துக்கொள்ளலாம் என கூறி அந்த சிறுமியிடம் தகாத தொடர்பில் இருந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், கணேசிடம் கேட்டதற்கு அவரை அடித்து அடைத்து சித்ரவதை செய்து, வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளான். மேலும் மது அருந்திவிட்டு புது மனைவியின் கைகளை கட்டியும், வாயை பொத்தியும் நாசம் செய்துள்ளான்.
கொடுமை தாங்க முடியாத புது மனைவி, தான் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து சமாதானப்படுத்துவது போல நடித்து தனது நண்பர்களை வரவழைத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டுள்ளான்.
இதையடுத்து அந்த வீட்டின் உரிமையாளரிடம் உதவி கேட்ட இளம்பெண், அங்கிருந்து தப்பி வந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவனை கைது செய்த போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது போல 11 பெண்களை திருமணம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியுள்ளதை அவன் ஒப்புக்கொண்டுள்ளான்.
ஏற்கனவே கன்னியாகுமரியை சேர்ந்த காசி என்பவன் பல பெண்களை ஏமாற்றி தற்போது கம்பி எண்ணி வரும் நிலையில், வெறும் 22 வயதில் 11 திருமணம் செய்துள்ள காமக்கொடூரனின் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அநுராதபுரத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளுக்கே இந்த கொடுமை நடந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதான விடுதி கண்காணிப்பாளர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் சிறுவர் இல்லத்திலிருந்த 50 சிறுவர்களிடமிருந்து பொலிசார் அறிக்கை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சிறுவர் இல்லத்தில் குழந்தைகள் துஷ்பிரயோகம் தொடர்பில் ஏராளம் குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அனுராதபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் பிரதேச சபையின் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 உறுப்பினர்களும், எதிராக இரண்டு உறுப்பினர்களும் வாக்களிக்க, மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.
அத்தோடு முன்னாள் தவிசாளர் உட்பட இரண்டு உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்துகொள்ளவில்லை.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசு கட்சியியை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகிக்க, ரெலோவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அதேபோன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க, இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
அத்தோடு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சுயேச்சை குழு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதன் மூலம் சபையின் வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த நல்லூர் பிரதேச சபையின் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்னாள் தவிசாளர் த.தியாகமூர்த்தியினால் இரண்டு தடவைகள் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்த நிலையில் தவிசாளர் தனது பதவியை இழந்திருந்தார்.
இதனால் சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்யும் கூட்டம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற போது புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ப.மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவலானது இன்னும் சமூகத்தில் அதிகம் பரவவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு அமைய, 3.5 தொடக்கம் 4 சதவீதமானோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
5 சதவீதத்தை கடக்கும் பட்சத்திலேயே சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதாக கருத முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசன் தற்போது நடைபெற்று வருகின்றது, இந்தப் போட்டியில் 12 பேர் எலிமினேட் ஆகிவிட்ட நிலையில் தற்போது ரியோ, ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி ஆகியோர் மட்டுமே உள்ளனர். இறுதி நிகழ்சிக்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது பிக் பாஸ் பண பெட்டிகளை வீட்டுக்குள் அனுப்பி இருக்கிறார். அதனை போட்டியாளர்கள் விருப்பப்பட்டால் எடுத்துக்கொண்டு இப்போதே வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டது.
முதலில் ஒரு லட்சம் வந்த நிலையில், அதை யாரும் எடுக்காத காரணத்தால், அதனை தொடர்ந்து இறுதியில் 5 லட்சம் ருபாய் வந்தது. அதனை உடனடியாகச் சென்ற கேப்ரியல்லா பணப்பெட்டியுடன் வெளியே செல்ல முனைந்தார். அப்போது ஓடிவந்த ரியோ தான் பணப்பெட்டியுடன் வெளியே செல்ல நினைப்பதாகக் கூற, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகின்றது. அதனால் மனமுடைந்த கேப்ரியல்லா ஒருபுறம் அழுக சனம் மற்றும் ஆஜித் அவரைச் சமாதானம் செய்ய முயல்கின்றனர்.
இறுதியில் தெளிவான முடிவு எடுத்து பணப்பெட்டியுடன் வெளியேறியுள்ளார் கேப்ரியல்லா. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் எப்படியும் ஜெயிக்க மாட்டோம் என்பதைக் கருத்தில் கொண்டு மற்ற போட்டியாளர்கள் வெறும் கையோடு வீடு திரும்ப உள்ள நிலையில் கேபியின் இந்த முடிவு குறித்து பிக் பாஸ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.