Category:
Created:
Updated:
சிலம்பரசன் விரைவில் தொண்டு நிறுவனம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு தற்போது ரசிகர்கள் போற்றும் மாஸ் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். ஓரிரு படங்கள் மட்டுமே நடித்து வந்த சிம்பு தற்போது 4க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது சிம்பு நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஈஸ்வரன் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதே போன்று ஹன்சிகா உடன் இணைந்து நடித்த சிம்புவின் மஹா படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்பு தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அன்றைய தினத்தன்று தொண்டு நிறுவனம் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.