Ads
இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த இளைஞன்
ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக் கொண்ட இளைஞன் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளான்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி – பாரதிபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளான். இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் அண்மையில் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு சிகிச்சையளித்து மருத்துவர்களினால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
எனினும் நேற்று முன்தினமும் மீளவும் ஊசி மூலம் போதைப்பொருளை இளைஞன் எடுத்துக் கொண்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். எவ்வாறாயினும் சிகிச்சை பயனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இளைஞனின் உயிரிழப்புக்கு போதைப்பொருளினால் இருதயத்தில் ஏற்பட்ட கிருமித்தொற்றுதான் காரணம் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads