Ads
டெல்லியில் சுவர் இடிந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு- 9 பேர் படுகாயம்
டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியில் விற்பனை கிடங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இன்று காலை அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், அதில் படுகாயம் அடைந்த 9 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. கட்டுமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
Info
Ads
Latest News
Ads