இந்தியாவில் 2-வது நாளாக 20 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா
இந்தியாவில் 2-வது நாளாக 20 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா ByMaalaimalar15 ஜூலை 2022 11:12 AM கொரோனா பாதிப்பால் கேரளாவில் 20 பேர் உள்பட மேலும் 47 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,25,604 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு சுமார் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று 20 ஆயிரத்தை தாண்டியிருந்த நிலையில் இன்று 2-வது நாளாக பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,038 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,237, மேற்கு வங்கத்தில் 3,029 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் மொத்தபாதிப்பு 4 கோடியே 37 லட்சத்து 10 ஆயிரத்து 27 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பால் கேரளாவில் 20 பேர் உள்பட மேலும் 47 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,25,604 ஆக உயர்ந்துள்ளது.