Ads
டெல்லியில் மேலும் 615 பேருக்கு கொரோனா உறுதி
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 38 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 1 ஆயிரத்து 43 பேர் குணமடைந்துள்ளனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 507 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கொரோனா பாதிப்பால் டெல்லியில் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 275 என்ற அளவில் உள்ளது.
Info
Ads
Latest News
Ads