பிரதமர் மோடி இன்று ஆந்திரா, குஜராத் பயணம்
ஆந்திர மாநிலம் பீமாவரம் மற்றும் குஜராத்தின் காந்தி நகருக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆந்திரப்பிரதேசத்தின் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாளின் ஓராண்டு கால விழாவை முன்னிட்டு, 30 அடி உயர வெண்கல சிலையை அவர் திறந்து வைக்க உள்ளார்.
"டிஜிட்டல் இந்தியா பாஷினி", "டிஜிட்டல் இந்தியா ஜெனசிஸ்" உள்ளிட்டவைகளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, மை ஸ்கீம், மேரி பெஹச்சான் ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து , புதிய தொழில்களுக்கான பயிற்சித் திட்டங்களின் கீழ் உதவி பெறவிருக்கும், முதலாவது 30 நிறுவனங்களின் கூட்டமைப்பையும் பிரதமர் அறிவிக்கவுள்ளார். பின்னர், குஜராத்தின் காந்திநகரில் டிஜிட்டல் இந்தியா வாரம் 2022ஐயும் தொடங்கி வைக்கிறார்.