Ads
நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வந்தது
மறுசுழற்சி செய்ய முடியாத, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் இந்த பூமிப்பந்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருமாறி வருகின்றன. இந்த கழிவுகளால் மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் ஆபத்தான சூழல் உள்ளது. எனவே இந்த வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு பல நாடுகள் தடை விதித்து வருகின்றன.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான டன் மேற்படி பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. இதனால் இந்த பிளாஸ்டிக் கழிவு அச்சுறுத்தலில் இருந்து விடுபடும் நோக்கில் இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் ஜூலை 1-ம் தேதி (நேற்று) முதல் தடை செய்யப்படுவதாக கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு 12-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.
Info
Ads
Latest News
Ads