குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
போபால், மத்திய பிரதேசம் தார் என்ற பகுதியை சேர்ந்தவர் மம்தா பாய். இவருக்கு திருமணம் ஆகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
மம்தா பாய் தனது கணவருடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மம்தா பாய், எலி மருந்தை தண்ணீரில் கலந்து தனது மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்து உள்ளார். பின் அவரும் அதனை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மம்தா தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு இந்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாரி(7) மற்றும் குணால்(3) ஆகிய 2 குழந்தைகள் உயிரிந்தனர். மம்தா மற்றும் அவரின் மற்றொரு மகளான சாக்சி(8) இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணையில் சண்டைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.