பிரதமர் மோடியின் தவறான முடிவால் நாட்டில் பேரழிவு - ராகுல் காந்தி விமர்சனம்
இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்ப்பதற்கு 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியர்கள் இங்கு போராடிக் கொண்டிருக்கும்போது, பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிடுவதில் மும்முரமாக இருக்கிறார். பிரதமர் மோடியின் தவறான முடிவால் எப்போதும் இல்லாத அளவில் அதிக வேலையின்மை விகிதம் அதிகரிப்பு, எல்ஐசி மதிப்பு இழப்பு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. டிஎச்எப்எல்ன் மிகப்பெரிய வங்கி மோசடி போன்ற பேரழிவுகளை மறைக்க முடியாது. இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறினார்.