நிவேதா தாமஸ்க்கு கொரோனா தொற்று
மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார். அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார்.
இன்று தனது சமூக வலைதளங்களில் தனக்கு கொரோனா இருப்பது உறுதி என பதிவிட்டுள்ளார் நிவேதா தாமஸ்.
“எல்லோருக்கும் வணக்கம்! எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதனால் என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டேன். கவலைப்பட ஒன்றுமில்லை, நான் எனது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி வருகிறேன். தயவு செய்து முகமூடி அனிந்து பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.