Category:
Created:
Updated:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை இன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, பேரறிவாளனும் அவரது பெற்றோரும் நடத்திய 31 ஆண்டுகால சட்டப் போராட்டத்தின் வெற்றி. ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சதித் திட்டம், பின்னணி தொடர்பாக எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
கடந்த 31 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வந்த மகனை போராடி மீட்டிருக்கிறார் அற்புதம்அம்மாள். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தன் மகன் கைது செய்யப்பட்டான் என்ற செய்தி கேட்டு 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதோ, முதல்முறையாக தன் மகனுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்ற தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சியில் இருக்கிறார். அற்புதம்மாள். மகனை நிரபராதி என்று நீதிமன்றம் சொன்னதால் அவரது 32 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.