Category:
Created:
Updated:
சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.
மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு, சிம்புவை எளிய மனிதர் என குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த 2 புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு படத்தில் சிம்பு, மண் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். மற்றொரு படத்தில் தரையில் படுத்திருக்கும் சிம்புவின் பக்கத்தில் நின்று எஸ்.ஜே.சூர்யா பேசிக் கொண்டிருக்கிறார்.