Ads
பஞ்சாபில் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குருநானக் தேவ் மருத்துவமனையின் எக்ஸ்ரே பிரிவுக்கு அருகே கட்டிடத்தின் பின்புறத்தில் வாகனம் நிறுத்துமிடத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கட்டிடத்தின் வெவ்வேறு வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சரியான நேரத்தில் வெளியேற்றினர். இதனால் பெரும் அசம்பாதவிதம் தவிர்க்கப்பட்டது.
Info
Ads
Latest News
Ads