Ads
தெலுங்கானா விபத்தில் 9 பேர் உயிரிழப்பு
தெலுங்கானா மாநிலத்தில் பயணிகள் வாகனம் மீது லொறி ஒன்று மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த இருபதுக்கு மேற்பட்டோர் துக்கநிகழ்வொன்றில் கலந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நால்வர் சம்வ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 5 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டப்பின்னர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், இரண்டு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads