Ads
அரசியல்வாதியாக இருந்தபோதும் விமர்சனம், ஆளுனராக உள்ளபோதும் விமர்சனம் - தமிழிசை
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் புதிய குடியரசு தலைவர் யார் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. பா.ஜ.க.தலைமை குடியரசு தலைவர் பதவிக்கு இந்த முறை தென்னிந்தியாவிலிருந்து, முக்கியமாக தமிழகத்திலிருந்து ஒருவரை முன்னிருத்த திட்டமிட்டு வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் டெல்லி சென்றது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பதிலளித்த தமிழிசை சௌந்தர்ராஜன் “சும்மா டெல்லி சென்றால் அதற்குள் என்னை இடம் மாறுதல் செய்யப்போவதாக சொல்கிறார்கள். அரசியல்வாதியாக இருந்தபோதும் விமர்சனம் வந்தது. தற்போது ஆளுனராக உள்ளபோதும் விமர்சனம் வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads