Ads
இந்தியாவில் புதிதாக ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா
இந்தியாவில் புதிதாக ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த இரண்டு நாள்களாக முறையே 949, 975 ஆகப் பதிவாகி வந்த பாதிப்புகள் இன்று ஆயிரத்து 150 ஆக உயர்ந்துள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் 954 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 4 கோடியே 25 இலட்சத்து 8 ஆயிரத்து 788 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், மேலும் 4 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 5 இலட்சத்து 21 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads