சமூக நீதினா என்ன தெரியுமா? மோடி விளக்கம்
குஜராத் மாநிலம் பூஜி-ல் அமைந்துள்ள கே.கே.படேல் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையை இன்று காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பூஜி-ல் உள்ள ஸ்ரீ கச்சி லேவா படேல் சமாஜாலில் கட்டப்பட்டுள்ள மருத்துவனை 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகும். இதில், இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி (கேத்லாப்), கார்டியோடோராசிக் சர்ஜரி, ரேடியேஷன் ஆன்காலஜி, மெடிக்கல் ஆன்காலஜி, சர்ஜிகல் ஆன்காலஜி, நெப்ராலஜி, யூராலஜி, நியூக்ளியர் மெடிசின், நியூரோ சர்ஜரி, மூட்டு மாற்று மற்றும் ஆய்வகம், கதிரியக்கவியல் போன்ற தொழில்நுட்பங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையை திறந்து வைத்த பிறகு பேசிய பிரதமர் மோடி, " அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் மருத்துவக் கல்வி கிடைக்கும். நம் நாட்டின் மக்கள் வறுமையில் இருந்து வெளிவர தநம்பிக்கையுடன் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் மருத்துவம் என்று வரும் போது சிகிச்சைக்கான செலவு குறித்த கவலை மக்களிடையே அதிகம் உள்ளது அதிலிருந்து விடுதலை கிடைக்கும் வகையில் அனைத்து கட்டமைப்புகளும் மேம்படுத்தபடும்.
இதேபோல், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் சிகிச்சைக்காக ஓவ்வொரு ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாய் ஆயுஸ்மான் பாரத் யோஜனா, ஜன் ஔஷதி யோஜனா உள்ளிட்ட திட்டங்களின் மூலம் மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. நாட்டின் சிறந்த சுகாதார வசதிகள் என்பது நாட்டின் சமூக நீதியை மேம்படுத்துகின்றன. குறிப்பாக நாட்டின் உள்ள ஏழைக்கு மலிவான முறையில் சிறந்த சிகிச்சை கிடைத்தால் அவர்கள் நாட்டை ஆளும் அரசின் மீதான நம்பிக்கைக்கு அதிகரிக்கும். இந்த நோக்கில் மத்திய அரசு சுகாதாரம் மற்றும் மருத்துவம் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து வருகிறது" எனக் கூறினார்.